லியோ படத்தின் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்

#India #Cinema #TamilCinema #Tamil People #release #2023 #Vijay #Tamilnews #Movie
Mani
2 years ago
லியோ படத்தின் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர்.

லியோ படத்தின் "நா ரெடி" பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லியோ படத்தின் வெளியீட்டு உரிமை குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமையை பிரபல நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!