பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்வாரா? வெளியான அறிவிப்பு

#world_news #Lanka4 #Putin #Russia Ukraine
Kanimoli
2 years ago
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி  கலந்து கொள்வாரா? வெளியான அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொள்ளமாட்டார் என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி அலுவலகம் நேற்று(19) அறிவித்திருந்தது. 

 அதற்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உறுப்பினராக, புடின் இந்த மாநாட்டில் கலந்துகொண்டால், போர்க் குற்றங்களுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என்பதால் தென்னாபிரிக்கா ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 இதேவேளை பிரேசில், இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4