பொலிஸார் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் : விரைவில் அமுல்படுத்தப்படும்!
தற்போது சாரதிகளின் தவறுகளால் அதிகளவிலான விபத்துக்கள் பதிவாகி வருகின்ற நிலையில், இது குறித்து பொலிஸார் முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
இதன்படி எதிர்வரும் காலங்களில் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் சாரதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், .நிஹால் தல்துவ, "தற்போது, ஓட்டுனர்கள் மது மட்டுமின்றி, விஷமருந்துகளையும் உட்கொண்டு வாகனங்களை ஓட்டுகின்றனர்.
வரும் காலங்களில், இது குறித்து அடையாளம் கண்டு, தேவையான உபகரணங்களை கொண்டுவந்து, மது, போதைப்பொருள் சோதனைகள் தொடங்கப்படும்.
குறிப்பாக இதுபோன்றவர்களுக்கு கைது செய்யப்பட்ட அவர்கள், மருத்துவரிடம் கொண்டு வரப்பட்டு, உரிய பரிசோதனைகள் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவாவின் கருத்துப்படி, 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரையில் 137 பேரூந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
ஜூலை 10ஆம் திகதிக்குள் 1,135 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், 1,202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். இது தவிர, 2,088 விபத்துக்களில் கடுமையான காயங்களும், 4,450 சிறிய காயங்களுடன் விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா மேலும் தெரிவித்தார்.