ஓய்வை அறிவித்த இந்தியா வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

#Women #NASA #Retire #astronaut #Indian
Prasu
2 hours ago
ஓய்வை அறிவித்த இந்தியா வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

உலகளவில் பேசப்படும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3வது மகளாக 1965ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது.

அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை படித்த சுனிதா, புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அழைத்துக்கொண்டது.

2006ம் ஆண்டு முதல்முறையாக அவர் விண்வெளிக்கு சென்றார். விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். 

அவரது சாதனையை பாடப்புத்தகங்கள் பேசின. கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் சில குழுவினருடன் நாசாவின் சார்பில் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

286 நாட்கள் (9 மாதங்கள்) நாட்களுக்கு பிறகு இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

இதுவரை 3 முறை விண்வெளிக்கு சென்று, 608 நாட்கள் விண்வெளியில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!