தொழில்நுட்ப கோளாறால் அவசர தரையிறக்கப்பட்ட சோனியா மற்றும் ராகுல் காந்தி சென்ற விமானம்

#India #Flight #Airport #technology
Prasu
2 years ago
தொழில்நுட்ப கோளாறால் அவசர தரையிறக்கப்பட்ட சோனியா மற்றும் ராகுல் காந்தி சென்ற விமானம்

பெங்களூருவில் இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளன. 

இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அடுத்தகட்ட நகர்வு குறித்து மும்பையில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவடைந்ததும் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 

இதையடுத்து விமானம் மத்திய பிரதேச மாநிலம் போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்டபின் விமானம் டெல்லி புறப்பட்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4