மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல ஆப்கானிஸ்தான் பாடகி

#Cinema #Death #Afghanistan #GunShoot
Prasu
2 years ago
மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல ஆப்கானிஸ்தான் பாடகி

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகியான ஹசிபா நூரி நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் பாடகி ஹசிபா நூரி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை சம்பவம் குறித்து பாகிஸ்தான் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பாடகி ஹசிபா நூரியின் மரணத்தை அவரது தோழி கோஸ்போ அஹ்மதி சமூக ஊடகங்கள் மூலம் உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஹசிபா நூரி, பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். பாகிஸ்தானில் அகதியாக தஞ்சம் அடைந்த பின்னர் மீண்டும் பாடகியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

ஹசிபா ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடுவதில் புகழ்பெற்ற பாடகியாக திகழ்ந்தார். ஹசிபாவுக்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவான ரசிகர்கள் உள்ளனர்.

பல ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சிகளில் தனது நடிப்பு திறமையின் மூலமும் ஹசிபா அங்கீகாரம் பெற்றார். மினா, சப்ஜா, ஜனம், ஆள யாரம் போன்ற பாடல்களால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

 கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால், ஹசிபா நூரி உட்பட அந்நாட்டு கலைஞர்கள் பாகிஸ்தானில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!