போலந்தில் பூனைகளுக்கு பரவும் H5N1 வைரஸ் தொற்று!

#SriLanka #Lanka4
Dhushanthini K
2 years ago
போலந்தில் பூனைகளுக்கு பரவும் H5N1 வைரஸ் தொற்று!

போலந்தில் பூனைகளுக்கும் பறவைக்காய்சலின் திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பரிசோதிக்கப்பட்ட பூனைகளில் பாதிக்கும் மேற்பட்டவைகளுக்கு  H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சலின் திரிபுகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த தொற்று தீவிர நிலையில் உள்ளதாகவும், மனிதர்களுக்கும் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது ஒரு தொற்றுநோயைத் தூண்டும் அளவுக்கு எளிதில் பரவுகிறது, என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நோயின் அறிகுறிகளையும் வெளியிட்டுள்ளது. 

இதன்படி இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களுக்கு,  இரத்தம் தோய்ந்த வயிற்றுப்போக்கு மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான அறிகுறிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!