பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு!

பல பொது சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். 

இதன்படி  மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறுகள்  ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4