எசல பெரஹெரா மின்விளக்கு அலங்கரிப்பு நிதி தொடர்பாக விசேட கலந்துரையாடல்

#SriLanka #Electricity Bill #Lanka4
Kanimoli
2 years ago
எசல பெரஹெரா மின்விளக்கு அலங்கரிப்பு நிதி தொடர்பாக விசேட கலந்துரையாடல்

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா மின்விளக்கு அலங்கரிப்புக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பாக மாவட்ட செயலாளரின் தலைமையில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார்.

 ஸ்ரீ தலதா மாளிகை, கண்டி நகரசபை பிரதேச செயலாளர் அலுவலகம் உள்ளிட்ட உரிய சகல நிறுவனங்களின் பங்குபற்றலுடன் இந்த கலந்துரையாடல் ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில், இடம்பெறவுள்ளதாக தியவதன நிலமே தெரிவித்துள்ளார். கடந்த வருடம் எசல பெரஹெர விளக்கு அலங்காரத்துக்கான மதிப்பிடப்பட்ட தொகை 90 இலட்சம் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த வருடம் தலதா மாளிகை உள்ளிட்ட நான்கு மதஸ்தலங்களுக்கும் பெரஹெரா செல்லும் அனைத்து வீதிகளுக்குமான மின் விளக்கு அலங்காரத்துக்கான மின்சார செலவு ஒரு கோடியே 32 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா அடுத்த மாதம் 21ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!