புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

#SriLanka #Accident #Train
Prathees
2 years ago
புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 இலக்க புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 பாணந்துறை மற்றும் எகொடௌயன புகையிரத நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 ரயில் பாதையை கவனக்குறைவாக கடக்கும் போதே குறித்த பெண் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். 

 உயிரிழந்தவர் 60 வயதுடைய பெண் எனவும் அவரது அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!