7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனர்

#SriLanka #Batticaloa #Arrest #Sexual Abuse
Prasu
2 years ago
7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனர்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனர் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தாயார் கடந்த 3 மாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையாருடன் வாழ்ந்து வந்த சிறுமியை 49 வயதுடைய தந்தையாரும், 52 வயதுடைய மாமனரும் இணைந்து கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திபோது, இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!