மர்மமான முறையில் அமெரிக்காவில் உயிரிழந்த இலங்கை இளைஞன்!

#SriLanka #Death #America
Mayoorikka
2 years ago
மர்மமான முறையில் அமெரிக்காவில் உயிரிழந்த இலங்கை இளைஞன்!

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அவரது உடல் அட்லாண்டாவில் உள்ள க்ரோகர் வாகன நிறுத்துமிடத்தில் காரில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜோர்ஜியாவின் கென்னசோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அட்லாண்டாவுக்கு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

 34 வயதான ஹசித் நவரத்ன, ஜூலை 2 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

 அவர் ஜூலை மாதம் 2ஆம் திகதி அட்லாண்டாவுக்குச் செல்லவிருந்ததாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 ஹசித் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!