இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு வன்மம்: ஹரி ஆனந்த சங்கரிக்கு மறுக்கப்பட்ட விசா

#SriLanka #Canada
Mayoorikka
2 years ago
இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு வன்மம்: ஹரி ஆனந்த சங்கரிக்கு மறுக்கப்பட்ட விசா

தனது விசா விண்ணப்பத்தினை இலங்கை நிராகரித்திருப்பதாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

 கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

 இது தொடர்பாக ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் பலரும் இதற்கு கண்டனங்களை வெளிப்படுத்தி இருந்தார்.

 குறித்த பதிவில், அரசாங்கத்திற்கு ஏற்றதாக காணப்படும்போதே கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

 கொடும்பாவிகளை எரிப்பது இலங்கையின் அரசாங்கங்களின் தவறுகளை சரிசெய்யாது.

 கவலையளிக்கும் விதத்தில் இலங்கை எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. நாங்கள் முன்னெடுத்துள்ள வேலைதிட்டத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கை இது எங்களை மௌனமாக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  சில வாரங்களிற்கு முன்னர் சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் ஹரி ஆனந்தசங்கரியின் கொடும்பாவிகளை எரித்தமை குறிப்பிடத்தக்கது.

 கனடாவின் தமிழர் இனப்படுகொலை நினைவுதினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே இந்த கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

 இதேவேளை தமிழர்கள் உரிமைக்கான கனடாவின் ஆதரவிற்கு பதில் நடவடிக்கையாகவே ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது எனவும் இது இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு வன்மச் செயல் எனவும் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!