கனேடிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

#SriLanka #Arrest #Sexual Abuse
Prathees
2 years ago
கனேடிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

எல்ல பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையமொன்றில் வைத்து 58 வயதான கனேடிய பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிகிச்சையாளர் ஒருவர் நேற்று (12) காலை கைது செய்யப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். விடுமுறைக்காக இந்நாட்டுக்கு வந்துள்ள இந்த வெளிநாட்டுப் பெண் எல்ல பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். எல்ல-பசறை வீதியில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்று, அங்கு மசாஜ் செய்து கொண்டிருந்த போது சிகிச்சையாளர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக எல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்படி நேற்று (முன்தினம் 11ம் திகதி) சந்தேக நபரை கைது செய்வதற்கான பரந்தளவிலான நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்திருந்த வேளையில் நேற்று (12ம் திகதி) காலை பொலிஸில் சரணடைந்த பின்னர் 34 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!