திரிபோஷ உற்பத்தி வழமைக்கு திரும்பியது

#SriLanka
திரிபோஷ உற்பத்தி வழமைக்கு திரும்பியது

திரிபோஷ உற்பத்தியும் விநியோகமும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதாந்தம் 13 இலட்சம் பக்கெட்கள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன கூறினார். 

 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 37 இலட்சம் திரிபோஷ பக்கெட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாதாந்தம் தேவைப்படும் திரிபோஷவை உற்பத்தி செய்வதற்காக 15 மெட்ரிக் தொன் கிலோகிராம் அளவிலான சோளம் அவசியமாக உள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன கூறினார்.

உள்நாட்டில் இந்த அளவில் பெற்றுக்கொள்ள முடியாமையால் அவை இந்தியாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றன. மேலும் அவை தற்போது கர்ப்பிணத்தாய்மார், பாலுாட்டும தாய்மார் மற்றும் 3 வயதிற்கு அதிகமான குழந்தைகள் ஆகியோருக்கும் மட்டுமே வழங்கப்படுவதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது. 


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!