இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்ட நான்கு நபர்களின் கதி என்ன?

#India #people #Rain #Flood #HeavyRain #Tamilnews #River
Mani
2 years ago
இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்ட நான்கு நபர்களின் கதி என்ன?

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள லட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் பாண்ட்லா வயது 33. நேற்றிரவு, நோய்வாய்ப்பட்ட தனது தாயார் சந்தலா தேவியை வயது 55 ராம்பூர் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்ப்பதற்காக தனது காரில் நேற்று முன்தினம் இரவில் அழைத்துச் சென்றார். காரில் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேர் இருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் நூக்லி பகுதியை இரவு 10.45 மணியளவில் கார் வந்தபோது, ​​மழையால் சேதமடைந்த சாலையை அடைந்திருந்ததால், நிலைதடுமாறி ஓடிய கார், அருகில் ஓடிய சட்லெஜ் ஆற்றில் பாய்ந்தது.

தகவலறிந்து வந்த போலீசார் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நேற்று மதியம் வரை காரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆற்றின் அதிக வெள்ளப்பெருக்கால் கார் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம், என்றும், இதனால் காரில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4