கைமா பரோட்டா, வெஜ் பரோட்டா செய்வது எப்படி?

#Tamil Nadu #Tamil People #Recipe #Cooking #Food #Tamil Food
Mani
2 years ago
கைமா பரோட்டா, வெஜ் பரோட்டா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • 4 பரோட்டா
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 குட மிளகாய்
  • 200 கிராம் கோஸ்
  • 2 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 2 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 3 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள்
  • 3 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் வெங்காயம், கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பிறகு பரோட்டாவையும் நீள நீள வாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பிறகு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், மற்றும் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய காய்கறிகள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கறிகள் பாதி வதங்கியதும் சாஸ் வகைகளை சேர்த்து கிளறவும். பிறகு நறுக்கிய பரோட்டா, மிளகுத்தூள், சேர்த்து நன்கு கிளறி சூடேறியதும் இறக்கவும். சுவையான கைமா பரோட்டா தயார்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!