ராஜஸ்தானில் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார் - 30 மாணவர்கள் படுகாயம்!

#Death #School #Accident #students #2023 #School Student #Injury #school van #Rajasthan
Mani
2 years ago
ராஜஸ்தானில் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார் - 30 மாணவர்கள் படுகாயம்!

இன்று, ராஜஸ்தானின் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில், பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் சுமார் 30 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, பொக்ரான் நகர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்ததாக சங்கரா காவல் நிலையத்தின் உதவி சப் இன்ஸ்பெக்டர் கைலாஷ் சந்த் கூறினார்.

காயமடைந்த பல மாணவர்கள் விரைவில் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் உள்ளூர் மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

வேறு சில குழந்தைகளின் பெற்றோர் அவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாக போலீஸ் அதிகாரி கூறினார். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரும் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்து குறித்து ஜோத்பூர் ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா கருத்து தெரிவிக்கையில், ஜெய்சால்மரில் இருந்து 11 பள்ளி குழந்தைகள் மருத்துவ சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது ஆபத்தான நிலையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விக்ரம் சிங் என அடையாளம் காணப்பட்ட ஊழியர் ஒருவர் காயம் அடைந்து உயிரிழந்தார்" என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4