யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் டெல்லியில் 144 தடை உத்தரவு

#India #Lockdown #Delhi #Flood #HeavyRain #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் டெல்லியில் 144 தடை உத்தரவு

மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மக்கள் அச்சமின்றி பார்வையிட சென்றதாலும், யமுனை நதியின் நீர்மட்டம் 207.55 மீட்டராகப் பதிவானதை அடுத்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மக்கள் அச்சமின்றி பார்வையிட சென்றதாலும், யமுனை நதியின் நீர்மட்டம் 207.55 மீட்டராகப் பதிவானதை அடுத்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியேற வேண்டாம் என்று டெல்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதாவது, டெல்லி யமுனை நதி நீர்மட்டம் அபாய அளவை எட்டியது. இன்று காலை 8 மணியளவில் பதிவான நீர்மட்டம் 207.25 மீட்டராக இருந்ததால் ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, கரையோரம் வசிக்கும் 30,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று முதல் டெல்லியின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்த மழை அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4