சுவீடனில் புனித குர்-ஆன் எரிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
சுவீடனில்  புனித குர்-ஆன் எரிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்!

சுவீடன் நாட்டில் புனித குர்-ஆன் எரிக்கப்பட்டது வழிபாட்டுச் சுதந்திரத்தை மீறும் செயல் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் சபை இது குறித்து இன்னும் அமைதி காப்பது ஏன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

 இச்சம்பவத்துக்கு இணங்கி இதை கருத்துச் சுதந்திரம் என மனித உரிமைகள் சபை கூறுமாயின் சர்வதேசத்தில் தெற்கு மற்றும் மேற்கத்திய அமைப்புகளுக்கு இடையே பிளவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 "இந் நிகழ்வை கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் மழுங்கடிக்க முடியாது. பெரும்பாலானவர்கள் இதை மதத்தின் மீதான தாக்குதலாக கருதுகின்றனர். ஆனால் இதனை ஆதரிக்கும் சில மேற்கத்திய தேசங்கள், பெரும் சீர்குலைவை உள்ளடக்குவதற்காக கருத்து சுதந்திரத்தின் துறைகளை விரிவுபடுத்துகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!