துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

#India #GunShoot #2023 #Died #IndianArmy #Killed
Mani
2 years ago
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் காஷ்மீர் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் ஒத்துழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேசம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராணுவம் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரஜோரியின் நவ்ஷாரா பகுதியில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

உடனடியாக பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற நிலையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும், 2 பயங்கரவாதிகளுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அந்த 2 பேரும் காட்டிற்குள் தப்பிச்சென்றனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4