நேபாளத்தில் மாயமான ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது - ஐவர் உயிரிழப்பு!

#Lanka4 #Helicopter
Dhushanthini K
2 years ago
நேபாளத்தில் மாயமான ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது - ஐவர் உயிரிழப்பு!

நேபாளத்தில்  மாயமான ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மனங் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான 9NMV என்ற  குறித்த ஹெலிகொப்டரில் ஆறுபேர் பயணித்த நிலையில், அதில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். மற்றொருவரை தேடி வருவதாக மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர். 

குறித்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில்,  காலை சுமார் 10 மணியளவில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன ஹெலிகாப்டரில் ஐந்து வெளிநாட்டவர்கள் இருந்ததாகவும், அந்த ஹெலிகொப்டரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!