பணமில்லை : மாற்றுவழி இருந்தால் கூறுங்கள் - விபத்து தொடர்பில் பந்துல குணவர்த்தன கருத்து!

#SriLanka #Bandula Gunawardana #Lanka4
Thamilini
2 years ago
பணமில்லை : மாற்றுவழி இருந்தால் கூறுங்கள் - விபத்து தொடர்பில்  பந்துல குணவர்த்தன கருத்து!

வீதி உடைப்பு தொடர்பில் கவலைப்படுவதில் அர்த்தமில்லை எனவும், அவற்றை சீரமைக்க பணிமில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மேற்படி கூறியுள்ளார். 

இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,  மன்னம்பிட்டிய - கொத்தலிய பாலம் குறித்து ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தபோதும், பணம் இல்லாத காரணத்தினால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

பணத்தை திரட்ட மாற்று வழி இருந்தால் கூறுங்கள். அப்படியானால் சமாளித்துக்கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!