இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: ரஞ்சித் பண்டார தகவல்

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: ரஞ்சித் பண்டார தகவல்

பொருளாதாரம் சரியான திசையில் செல்வதால், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் உட்பட எஞ்சியுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் காலங்களில் தளர்த்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

 ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த வருடத்தை விட நாட்டின் நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 இலங்கை நிலையான வளர்ச்சியை அடைவதற்கு சில சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் சர்வதேச அமைப்புகளும் ஏனைய நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 பொருளாதாரம் சரியான திசையில் செல்வதால், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் உட்பட எஞ்சியுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் காலங்களில் தளர்த்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

 கடனை திருப்பி செலுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நீண்ட கால அவகாசம் வழங்கியுள்ள அதேவேளை சர்வதேச நிறுவனங்களின் உதவியை அரசாங்கம் பெற்றுள்ளதாகவும் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4