கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

#SriLanka #Police #Kilinochchi #drugs #Lanka4
Kanimoli
2 years ago
கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

கஞ்சா பொதியுடன் ஒருவர் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஆனையிறவு சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 இதன்போது தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 கிளிநொச்சி முறிப்பு பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்து 5kg 990g எடையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

 விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4