இளம்பெண்ணின் ஆடையை கழற்றி வீடியோ எடுக்கும் அளவிற்கு சமுதாயம் அழிந்துள்ளது - அகிலவிராஜ்
பாலியல் கல்வி குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டபோது, அதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தன. ஆனால் தற்போது நாட்டில் நடக்கின்ற விடயங்கள் அதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிக்கு ஒருவருடன் இருந்த இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் காணொலியாக எடுக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது பாலியல் கல்வி குறித்தும் அது பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசிய அவர், மக்கள் வெளிப்படையாகச் சிந்திப்பது சிலருக்குப் பிடிக்காது எனக் கூறினார்.
ஏழாவது புத்தகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டபோது அதற்கு எத்தனை எதிர்ப்பு வந்தது? இவைகள் அழிந்ததால் தான் முகநூலில் இவ்வாறான பதிவுகள் போடப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
ஒரு இளம் பெண்ணின் ஆடையை கழற்றி வீடியோ எடுக்கும் அளவிற்கு இந்த சமுதாயத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல, சமுதாயமே அழிந்துள்ளது எனவும்,
மனிதநேயம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.