பேஸ்புக் விருந்தில் கலந்துகொண்ட 12 பேர் கைது

#SriLanka #Facebook #Arrest
Prathees
2 years ago
பேஸ்புக் விருந்தில் கலந்துகொண்ட 12 பேர் கைது

பேஸ்புக் பார்ட்டியில் சோதனை நடத்தப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டனர்,

 பேஸ்புக் சமூக வலைப்பின்னல் மூலம் பன்வில, மடோல்கெலே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பன்வில பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

 அந்த விருந்தில் 13 பெண்கள் உட்பட 112 பேர் கலந்து கொண்டுள்ளனர், அவர்களை காவல் துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

 போதைப்பொருள் வைத்திருந்த 10 பேரும் விருந்துக்கு ஏற்பாடு செய்த இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

 அவர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 சந்தேக நபர்கள் மாத்தறை, நாரம்மல, அம்பதென்ன, உக்குவெல, கம்பளை, நுவரெலியா மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 21 மற்றும் 33 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4