8 வயது சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புடின்

#Russia #Putin #President
Prasu
2 years ago
8 வயது சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புடின்

வெளி உலகில் தன்னைக் கடுமையானவராக காட்டிக் கொள்ளும் ரஷ்ய ஜனாதிபதி புதின், சமீபத்தில் ரஷ்யாவில் சிறுமி ஒருவரை அழைத்து விருந்தளித்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும், ரஷ்ய ஜனாதிபதி புதின் சமீபத்தில் தாகெஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தின்போது புதின் பங்கேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்ததையும் செய்திகளில் காணக்கூடியதாக இருந்தது. மேலும், அவரை பார்க்க 8 வயது சிறுமியும் அங்கு வந்திருந்தார்.

ஆனால், புதினை அவரால் சந்திக்க முடியவில்லை. இதனை தாங்கிக்கொள்ள முடியாத அந்தச் சிறுமி கண்ணீர் விட்டு அழுகிறார். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகியது. இந்த வீடியோ புதினின் பார்வைக்குச் செல்கிறது. இதனைத் தொடர்ந்து அச்சிறுமியையும், அவரது பெற்றோரையும் மாஸ்கோவுக்கு அழைப்பு விடுத்தார் புதின். 

அதன்படி இந்த வாரம் புதினை சந்தித்து அச்சிறுமி வாழ்த்து பெற்றார். அச்சிறுமியை நேரில் சந்தித்து ரஷ்ய அதிபர் புதின் ஆச்சரியத்தை அளித்திருக்கிறார்.

 அச்சிறுமியை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து புதின் நாற்காலியில் அமர வைத்தும் உரையாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை ரஷ்ய அரசு வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!