பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு!

#SriLanka #Police #Lanka4 #President
Thamilini
2 years ago
பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு!

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரட்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த  உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். 

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் கடந்த ஜூன் 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் குறித்த பதவி வெற்றிடமாக உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

நாட்டில் அதிகரித்து வருகின்ற குற்றச்செயல்களுக்கு மத்தியில் பொலிஸ்மா அதிபரின் அவசியப்பாடு குறித்தும் வலியுறுத்தப்பட்டது. 

இதனையடுத்து ஜனாதிபதி 48 மணி நேரத்துக்குள் புதிய பொலிஸ் மா அதிபரை நியமனம் செய்வார் என பிரதமர் jதினேஷ் குணவர்தன நேற்று (ஜுலை 07) பாராளுமன்றத்தில் அறிவித்தார். 

இதற்கமைவாக தற்போது பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் மேலதிகமாக மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!