கையடக்கத்தொலைபேசியினால் தற்கொலை செய்துகொண்ட 15 வயது மாணவி!

#SriLanka #Death
Prathees
2 years ago
கையடக்கத்தொலைபேசியினால் தற்கொலை செய்துகொண்ட 15 வயது  மாணவி!

ஹுருலுனிகவெவ்வ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவியொருவர், பாடசாலைக்கு செல்போன் எடுத்துச் சென்ற வேளை நாளை மறுதினம் தனது தந்தையுடன் வருமாறு அதிபர் எச்சரித்ததையடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 உயிரிழந்த மாணவி ஹுருலுனிகவெவ, கலென்பிந்துனுவெவ, அனுர வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுமி என கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

 கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 617/இ ஜனசிரிகம, ஹுருலுனிகாவெவ என்ற முகவரியில் வசிக்கும் இந்த மாணவி கடந்த 4 ஆம் திகதி பாடசாலைக்கு பேட்டரி சார்ஜ் ஆகாததால் தந்தை தூக்கி எறிந்த கையடக்கத் தொலைபேசியை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

 பின்னர், கையடக்கத் தொலைபேசியுடன் வந்த மாணவி தொடர்பில் பாடசாலை அதிபருக்குத் தெரியவந்ததையடுத்து, அதிபர் தொலைபேசியைக் கைப்பற்றியுள்ளார். பின்னர், அதே பாடசாலையில் படிக்கும் மாணவியின் சகோதரனை அழைத்து வந்து, அக்கா பாடசாலைக்கு கொண்டு வந்த போனை திருப்பி தர மறுநாள் தந்தையுடன் வருமாறு எச்சரித்துள்ளார்.

 அன்றைய தினம் மாலை மாணவியின் சகோதரன், அதிபரின் செய்தியை பெற்றோரிடம் கொடுத்துள்ளார். ஆனால், பெற்றோர்கள் மாணவியிடம் எதுவும் கூறவில்லை என்றும், மறுநாள் பாடசாலைக்குச் செல்லப் போவதாக மட்டும் தெரிவித்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

 ஆனால் பதற்றம் மற்றும் பயம் அடைந்த சிறுமி, வீட்டில் விவசாயத்திற்காக தந்தை அறையில் வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளார். மாணவி படுக்கையில் கதவை மூடி உறங்கிக் கொண்டிருந்த போது, ​​சில முனகல் சத்தம் கேட்ட பெற்றோர், அவர் விஷம் அருந்தியிருப்பதைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

 இது குறித்து கலேன்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பி.ஓ.பி. திஸாநாயக்கவிடம் நாம் கேட்டபோது, ​​மாணவி தனது வீட்டில் விஷம் அருந்தியதாகத் தெரிவித்தார். இதற்கிடையில், தகவல்களின்படி, காதல் உறவில் ஈடுபடுவது குறித்து அவரது தந்தை முன்பு எச்சரித்துள்ளார்.

 உயிரிழந்த நிபுனி சௌபாக்யவின் தந்தை சமனல கெதர சிறிசேன, நாட்டில் உள்ள அனைத்து முதியவர்களும் தங்கள் பிள்ளைகளை எப்போதும் கண்காணித்துக்கொள்ளுமாறும் அவர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொடுக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!