உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை வழங்க தீர்மானித்துள்ள அமெரிக்கா

#America #Weapons #Ukraine #War
Prasu
2 years ago
உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை வழங்க தீர்மானித்துள்ள அமெரிக்கா

ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ "கிளஸ்டர் குண்டுகள்" என்று அழைக்கப்படும் ஆபத்தான கொத்துக் குண்டுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உக்ரைனில் போரின் ஆரம்ப நாட்களில், ரஷியா கொத்து குண்டுகளை பயன்படுத்தினால் போர்க்குற்றம் என்று அமெரிக்கா குறிப்பிட்டது. இந்த குண்டுகளை பயன்படுத்துவதற்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் நேட்டோவின் முன்னணி நாடுகள் கையெழுத்திட்டன. 

ஆனால் தற்போதைய இந்த நடவடிக்கை அமெரிக்காவை அந்த உடன்படிக்கையில் இருந்து வேறுபடுத்துகிறது. 2008ம் வருடம் கையெழுத்திடப்பட்ட கிளஸ்டர் குண்டுகளுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஏற்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின்படி, அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துதல், கையிருப்பு வைத்தல், மற்றும் பரிமாற்றம் செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அந்த சந்திப்பின் முடிவில் இந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

ரஷிய-உக்ரைன் போரின் தொடக்க காலங்களில், ரஷியா கிளஸ்டர் வெடிகுண்டுகளை பயன்படுத்துவதை குறித்து கேட்டபோது, வெள்ளை மாளிகை, "நாங்கள் அத்தகைய அறிக்கைகளைப் பார்த்தோம். அவை உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது ஒரு போர்க் குற்றமாக கருதப்படும்" என தெரிவித்திருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4