செங்கை நீதிமன்றம் அருகே ரவுடி மீது வெடிகுண்டு வீச்சு; நீதிமன்ற வாசலில் பரபரப்பு!

#Tamil Nadu #CourtOrder #BombBlast #Tamilnews #Breakingnews #TamilNadu Police #ImportantNews #Bomb
Mani
3 years ago
செங்கை நீதிமன்றம் அருகே ரவுடி மீது வெடிகுண்டு வீச்சு; நீதிமன்ற வாசலில் பரபரப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த அய்யஞ்சேரியைச் சேர்ந்தவர் லோகேஷ், 30; ரவுடி. இவர் மீது, சென்னை புறநகர் பகுதி காவல் நிலையங்களில், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், தன் சகோதரர் பாஸ்கர் கொலை வழக்கில் சாட்சி சொல்வதற்காக, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நேற்று வந்தார். அங்குள்ள ஒரு கடையில், தன் நண்பருடன் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கும்பல், லோகேஷ் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்தார். வெடிகுண்டு சத்தம் கேட்டவுடன், நீதிமன்றத்தில் இருந்தோர் அலறியடித்து வெளியேறினர்.

தகவலறிந்து வந்த போலீசார், அவரை மீட்டு, '108' ஆம்புன்ஸ் வாகனம் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். எஸ்.பி., சாய் பிரணீத் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். கடைகளின் 'சிசிடிவி' கேமரா காட்சிகள் வைத்து விசாரணை நடக்கிறது. குற்றவாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!