மொட்டு கட்சியினருக்கு ரணிலை பற்றி எதுவும் தெரியாது! மரிக்கார்

#SriLanka
Mayoorikka
2 years ago
மொட்டு கட்சியினருக்கு ரணிலை பற்றி எதுவும் தெரியாது! மரிக்கார்

ரணிலை பற்றி மொட்டு கட்சியினருக்கு எதுவும் தெரியாது என்றும் தாங்கள் நன்கு அவரை பற்றி அறிந்துள்ளோம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமக்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) தெரிவித்தார்.

 நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய போது இதைத் தெரிவத்த அவர் தெரிவிக்கையில், “மத்திய வங்கி பினைமுறி கொள்ளையை மக்கள் முன் வெளிப்படுத்தியவர் தான் என்றே பந்துல குணவர்தன தேர்தலில் போட்டியிட்டார்.

 ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்க நாங்கள் பைத்தியங்கள் அல்ல என்று ரோஹித அபேகுணவர்தன கூறினார். ரணில் சிறைக்கு செல்லும் நாளில்தான் நான் உறங்குவேன் என்று கூறிய மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரே கடன் மறுசீரமைப்பு சட்டத்தை ஆதரிக்கின்றனர்.

 இவர்கள் எப்படி நாட்டை கட்டியெழுப்ப போகின்றனர். ரணிலை பற்றி மொட்டு கட்சியினருக்கு எதுவும் தெரியாது. 

நாங்கள் நன்கு அவரை பற்றி அறிந்துள்ளோம். கடன் பெறவும் விற்கவுமே தெரியும். இந்நிலையில் கடன் மறுசீரமைப்பு சட்டம் எவ்வளவு சிக்கலானது என்று புரியும்” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!