2 மாதங்களுக்கு பிறகு மணிப்பூரில் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்

#India #School #Protest #Reopen #Fight
Prasu
2 years ago
2 மாதங்களுக்கு பிறகு மணிப்பூரில் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. 

இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2 மாத காலத்துக்கு பிறகு மணிப்பூரில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. 

முதல் நாளில் மாணவர்களின் வருகை குறைவான அளவே இருந்தது. மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4