கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்க்களின் அச்சுறுத்தல்

#India #Canada #world_news #Lanka4 #லங்கா4
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்க்களின் அச்சுறுத்தல்

கனடாவில் இயங்கிவரும் இந்திய துாதரகத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் கொண்ட சுவரொட்டிகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

 மிரட்டல் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான கனடா தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்ததாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தை 'காலிஸ்தான்' என்ற பெயரில் தனிநாடாக அறிவிக்க பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

 காலிஸ்தான் ஆதரவாளர்கள் என அழைக்கப்படும் இவர்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அவர்களது பெயர்களுடன் கூடிய சுவரொட்டிகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதனால் கனடாவில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளதுடன் இந்திய துாதரக அதிகாரிகளுக்கு விடுக்கபபட்ட மிரட்டல் காரணமாக இந்தியாவுக்கான கனடா துாதரை அழைத்து கண்டனம் தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4