கல்லூரி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

#Accident #Rain #HeavyRain #Tamilnews #Breakingnews #College Student #ImportantNews
Mani
2 years ago
கல்லூரி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

நேற்று கோவையில் தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கல்லூரியில் ஏற்கனவே இருந்த சிறிய பக்கவாட்டு சுவரை ஒட்டி புதிதாக 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று கட்டுமான பணியின் போது, ​​பழமையான சுவர், எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்ததில், இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.

ஆந்திராவைச் சேர்ந்த 3 பேரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4