இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி!

#SriLanka #World Bank
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி!

250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியிருந்தது.

 அந்தத் தொகையில், 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு செலவு திட்டத்திற்காகவும் , 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சமூகப் பாதுகாப்பிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, வரவு செலவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து 250 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!