கடன் மறுசீரமைப்புக்கு பயந்து வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மீட்கும் மக்கள்!

#SriLanka #Bank #IMF
Mayoorikka
2 years ago
கடன் மறுசீரமைப்புக்கு பயந்து வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மீட்கும் மக்கள்!

கடன் மறுசீரமைப்பு மூலம் அரசாங்கம் தமது வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்வதாகக் கூறி சிலர் தமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 ஆனால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் வங்கி சேமிப்புக் கணக்குகள் மேலும் பலப்படுத்தப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 எதிர்க்கட்சிகள் சில நாட்களாக மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரம் தற்போது முற்றிலும் பொய்யாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கெஸ்பேவ தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 வெளிநாட்டுக் கடன் வழங்குநர்கள் முன்வைத்துள்ள பிரேரணையின் பிரகாரம், தமது கடனைத் துண்டிப்பதற்கு அரசாங்கம் உள்நாட்டுக் கடனையும் குறைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!