தண்டவாளத்தில் நின்று செல்பி 2 வாலிபர்கள் ரயில் மோதி பலி!

#India #Death #Accident #Tamil People #Train #Tamilnews #Died
Mani
2 years ago
தண்டவாளத்தில் நின்று செல்பி 2 வாலிபர்கள் ரயில் மோதி பலி!

திருப்பூர்

திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 2 வாலிபர்கள் ரயில் மோதி பலியாகினர். ஈரோடு மாவட்டம் பர்கூர் அடுத்த தாமரைக்கரையை சேர்ந்தவர்கள் பாண்டியன் (22), விஜய் (23). இவர்கள் திருப்பூர் ரங்கநாதபுரத்தில் உள்ள நிப்டிங் கம்பெனியில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தனர். நேற்று மதியம் அருகில் உள்ள அணைப்பாளையத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்துள்ளனர்.

அப்போது எர்ணாகுளத்தில் இருந்து பிளாஸ்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்தது. செல்பி எடுக்கும் ஆர்வத்தில் இருந்ததால் ரயில் வருவதை அவர்கள் கவனிக்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 வாலிபர்களும் உடல் சிதறி அங்கேயே பலியானார்கள். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4