இதுவரை ரஷ்ய வாக்னர் கூலிப்படையைச் சேர்ந்த 21,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

#world_news #Russia #Ukraine #Lanka4 #Putin #Zelensky #Russia Ukraine
Kanimoli
2 years ago
இதுவரை ரஷ்ய வாக்னர் கூலிப்படையைச் சேர்ந்த 21,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

உக்ரைன் போரில் இதுவரை ரஷ்ய வாக்னர் கூலிப்படையைச் சேர்ந்த 21,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவிக்கின்றது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லெனெஸ்கி கூறுகையில், கிழக்கு உக்ரைனில் கடுமையான போராளிக் குழுவான வாக்னர் ராணுவம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

 உக்ரேனிய ஜனாதிபதியின் கூற்றுப்படி, போரில் 80,000 க்கும் மேற்பட்ட வாக்னர் வீரர்கள் காயமடைந்தனர். வாக்னர் கூலிப்படைக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இதேவேளை, உக்ரைன் ஜனாதிபதி உயிருக்கு பயப்படவில்லையா என வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்டுள்ளனர். அங்கு அவர் தனது உயிருக்கு பயப்பட வேண்டியது தாம் அல்ல, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் என்று கூறினார்.

 ரஷ்யா மட்டுமே என்னை கொல்ல விரும்புகிறது, ஆனால் முழு உலகமும் புடினைக் கொல்ல விரும்புகிறது என உக்ரைன் ஜனாதிபதி கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!