கடன் மறுசீரமைப்பு பிரேரணையில் கலந்து கொள்ளாதது ஏன் : நாமல் விளக்கம்!

#SriLanka #Namal Rajapaksha #Lanka4
Thamilini
2 years ago
கடன் மறுசீரமைப்பு பிரேரணையில் கலந்து கொள்ளாதது ஏன் : நாமல் விளக்கம்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணைக்குநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்களிக்காதமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,  "நாட்டைக் கட்டியெழுப்ப எடுக்கப்படும் தீர்மானங்கள் ஜனரஞ்சகமானதாக இருக்க வேண்டும். 

இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். அந்த முடிவுகளை ஜனரஞ்சக முடிவுகளாக மாற்றுவது பொதுஜன பெரமுனவின் பொறுப்பு. 

கடனை மறுசீரமைப்பது சரி. அது நியாயமானதாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது எமக்கு முக்கியமில்லை. 

இந்த நாட்டிற்கு சொல்லுங்கள்.  ஏனெனில் ஒரு நாடாக நாம் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலகட்டம் உள்ளது.

நேற்று பார்த்தோம் சஜித் பிரேமதாச. அணியினர் நேற்று மதியம் வரை பிரேரனையை  ஆதரித்து கடைசியில் எதிர்த்தனர்.ஏன் என தெரியவில்லை.

எப்போதும் போல் கடைசி நிமிடத்தில் எதிர்த்தார்கள்.அது அவர்களின் அரசியல் குணம்.இந்த நாட்டை ஸ்திரப்படுத்தும் பொறுப்பு எமக்கு உள்ளது.இதை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!