கொழும்பில் காதலியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட நபர் கைது!
கொழும்பில் தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், மேலும் தெரியவருவதாவது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக கடையாற்றுவதற்காக பெண்ணொருவர், பிலியந்தலையைச் சேர்ந்த சுனில் சந்திரசிறி என்ற நபருடன் பழகி வந்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குறித்த தனியார் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பை பெற்றதும், யுவதி காதலனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த யுவதியை பழிவாங்கும் நோக்கில் சுனில் சந்திரசிறி யுவதியின்நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டுள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில், சுனில் சந்திரசிறியை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
வழக்கினை விசாரணை செய்த நீதிபதி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.