சவேந்திர சில்வாவிற்காக காத்திருக்கும் விமல் வீரவன்ச!

#SriLanka #Wimal Weerawansa #Lanka4
Thamilini
2 years ago
சவேந்திர சில்வாவிற்காக காத்திருக்கும் விமல் வீரவன்ச!

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா வழக்கு தொடரும்வரை தாம் காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி குருவிட்ட  பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், 'நவய செங்கவுனு கதாவ என்ற நூலை வெளியிட்ட போது அதற்கு எதிராக வழக்கு தொடருவேன் என சவேந்திர சில்வா சவால் விட்டதாகவும், அதற்காக தான் காத்திருப்பதாகவும் கூறினார். 

இதுவரை வழக்கு தொடரப்படவில்லை எனக் குறிப்பிட்ட விமல் வீரவன்ச, அவர் வழக்கு தொடரும் பட்சத்தில், நீதிமன்றத்தில், நூலில் எழுதாத சில விடயங்களை வெளியிடமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!