சதுப்பு நிலத்தில் ஒரு நபரின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

#SriLanka #Murder #Crime
Prathees
2 years ago
சதுப்பு நிலத்தில் ஒரு நபரின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

பமுனுகம, நீலசிறிகம பிரதேசத்தில் சதுப்பு நிலத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

 துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 குறித்த நபர் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 

 காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த ஒருவரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். 

 அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

 கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் நீலிசிரிகம சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!