சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டு சிலைகள்!

#India #Tamil Nadu #world_news #Singapore #Tamilnews #Breakingnews #statue
Mani
2 years ago
சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டு சிலைகள்!

சிங்கப்பூர் அருங்காட்சியத்தில் உள்ள 12 சிலைகள், தமிழகத்தில் எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டவை என்பதை அடையாளம் கண்டு தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள 'ஏஷியன் சிவிலைசேஷன்' அருங்காட்சியகத்தில் ராமானுஜர், புத்தர், அனுமன், விஷ்ணு, சிவன் உள்ளிட்ட 10 சுவாமி சிலைகளுடன் 2 கலைப் பொருள்கள் தமிழ்நாட்டில் இருந்து வாங்கி வரப்பட்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தச் சிலைகள் குறித்து தகவலைத் திரட்டும் வகையில், அவற்றின் புகைப்படத்தை தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

சிலைகள் குறித்து சரியான தகவல் தெரிவிப்போருக்கு 10,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்போர் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!