காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

#SriLanka #weather #Rain #Lanka4
Kanimoli
2 years ago
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 வடமேல் மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யலாம் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொிவித்துள்ளது.

 ஊவா, வட மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும், 

புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4