எக்ஸ்பிரஸ் பேள் கப்பல் விபத்து: வட பகுதி மீனவர்களுக்கும் பாதிப்பு- அகில இலங்கை மீனவ பிரதிநிதிகள்

#SriLanka #Jaffna #Fisherman
Mayoorikka
2 years ago
எக்ஸ்பிரஸ் பேள் கப்பல் விபத்து: வட பகுதி மீனவர்களுக்கும் பாதிப்பு- அகில இலங்கை மீனவ பிரதிநிதிகள்

யாழ் மாவட்ட மீனவ அமைப்புகளுக்கும் அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்க நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது 

 அதன் பின்னர் இரண்டு அமைப்பினரும் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

 இதன் போது எக்ஸ்பிரஸ் பேள் கப்பல் தொடர்பாக தென்பகுதி மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு வடபகுதி மற்றும் கிழக்கு பகுதி மீனவர்களுக்கும் ஏற்பட்டது இது தொடர்பான வழக்கை கொண்டு செல்வதற்காக வடக்கு யாழ் மாவட்டங்களில் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக கருத்து தெரிவித்தனர்.

 அத்தோடு யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கடல் அட்டை பண்ணைகளால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது எக்ஸ்பிரஸ் பேள் கப்பலினால் கடல் வாழ் உயிரினங்களும் கடலுக்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர் இதன் தாக்கம் பத்து வருடங்களுக்கு மேல் காணப்படும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

 அத்தோடு அரசாங்கம் மக்களின் பிரச்சனையை சர்வேச நீதிமன்றத்தில் தீர்ப்பது விரும்பாத நிலையில் எக்ஸ்பிரஸ் பேள் கப்பலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கை தொகுத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

   இரு தரப்பும் கலந்துரையாடலிலும் எக்ஸ்பிரஸ் போல் கப்பல் காரணமாக சூழலுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கு மேற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக வழக்குகளை கொண்டு செல்வதற்காக விடையங்களும் ஆராயப்பட்டதாக ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4