Titan நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

#Death #Blast #Ship
Prasu
2 years ago
Titan நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

Titan நீர்மூழ்கிக் கப்பலின் வெடிப்பை அமெரிக்கக் கடற்படை கண்டறிந்ததாக தெரியவந்துள்ள நீர்மூழ்கிக் கப்பல் காணாமற்போன சிறிது நேரத்தில் கடலடி ஒலிக் கண்காணிப்பு அமைப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்தது.

அந்த ரகசிய ஒலிக் கண்காணிப்பு அமைப்பு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல் காணாமற்போன சிறது நேரத்தில் வெடிப்பு பதிவானதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்கக் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பதிவின் தரவுகளை ஆராய்ந்ததில் அது ஒரு வெடிப்பைக் குறிக்கும் விதத்தில் இருந்ததாக அந்த அதிகாரி கூறினார்.

 Titan நீர்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து அந்தப் பதிவு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்து கடலுக்கடியில் மாயமான அந்த நீர்மூழ்கியை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கடலோர காவல்படையினர் 4 நாட்களாக இரவு பகலாகத் தேடிவருகின்றனர். 

 அதிலிருந்த பாகிஸ்தானிய தொழிலதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. அவர்களது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!