அமெரிக்க திறைசேரி செயலாளரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

#SriLanka #Sri Lanka President #America
Mayoorikka
2 years ago
அமெரிக்க திறைசேரி செயலாளரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலெனை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொடுள்ளார்.

 புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கை குறித்த சர்வதேச மாநாட்டிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

 இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என ஜனெட் யெலென் தெரிவித்தார்.

 இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் பற்றி நாங்கள் நன்றாக கலந்துரையாடினோம்.

 அத்துடன், இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளித்துள்ளதாக கூறிய அவர், இலங்கையில் சீர்திருத்தம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் விரைவில் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்திசெய்யவேண்டும் எனவும் ஜனெட் யெலென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!