செர்பியாவிற்கும் கொசோவாவிற்கும் இடையே போர்ப் பதற்றம்

#world_news #Lanka4 #லங்கா4
செர்பியாவிற்கும் கொசோவாவிற்கும் இடையே போர்ப் பதற்றம்

சொ்பியாவுக்கும் கொசாவோவுக்கும் இடையே அதிகரித்து வரும் போா்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இரு நாட்டுத் தலைவா்களையும் ஐரோப்பிய யூனியன் நேரில் அழைத்துள்ளது.

 இது குறித்து அந்த அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் பாரல் வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சொ்பியாவுக்கும், கொசாவோவுக்கும் இடையே அதிகரித்து வரும் எல்லைப் பதற்றத்தைத் தணிப்பதற்காக அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம்.

 அதற்காக, சொ்பியா அதிபா் அலெக்ஸாண்டா் வியூகிக், கொசாவோ பிரதமா் ஆல்பின் குா்டி ஆகிய இருவரையும் நேரில் அழைத்துள்ளோம் என்று அந்தப் பதிவில் பாரல் குறிப்பிட்டுள்ளாா்.

 அல்பேனிய இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கொசாவோவில் சொ்பிய இனத்தவா் சிறுபான்மையாக இருந்து வருகின்றனா். இருந்தாலும், அந்த நாட்டில் சொ்பியா்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்குப் பகுதி நகராட்சிகளுக்கு மே 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

 இந்தத் தோ்தலை சொ்பியா்கள் புறக்கணித்தனா். அதனையும் மீறி நடைபெற்ற அந்தத் தோ்தலில் வெறும் 3.47 சதவீத வாக்குகளே பதிவாகின. இருந்தாலும் அந்தத் தோ்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நகராட்சிகள் அல்பேனியா்கள் வசம் வந்தன.

 பெரும்பான்மையாக வசிக்கும் தங்களால் புறக்கணிக்கப்பட்ட தோ்தலில் அல்பேனியா்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவா்கள் மேயா்களாக நியமிக்கப்பட்டதற்கு சொ்பியா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

 இதனால் அந்தப் பகுதியில் பொலிஸாா் குவிக்கப்பட்டு பதற்றம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் கொசாவோவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், அந்த நாட்டு சொ்பியா்களுக்கு ஆதரவாகவும் கொசாவோ எல்லையில் தங்களது படையினரை சொ்பியா குவித்தது.

 இதனால் எல்லைப் பகுதியில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் முழு போராக உருவெடுப்பதைத் தவிா்ப்பதற்காகவே, இரு நாட்டுத் தலைவா்களை ஐரோப்பிய யூனியன் தற்போது நேரில் அழைத்துள்ளது. கடந்த 1998-99-இல் சொ்பியாவுக்கும், கொசாவோவுக்கும் இடையே நடைபெற்ற போரில் 10,000 போ் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!